உலகம்

மார்க் ஜுக்கர்பெர்க்கின் முகச்சாயலில் குழந்தை இயேசு சிலை-பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மார்க் ஜுக்கர்பெர்க்கின் முகச்சாயலில் குழந்தை இயேசு சிலை-பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

JustinDurai

அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தை இயேசுவின் சிலை, மார்க் ஜுக்கர்பெர்க்கின் முகச்சாயலில் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தை இயேசுவின் சிலை புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் அன்னை மேரியின் கரங்களில் குழந்தை இயேசு வீற்றிருக்கிறது. இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதற்கு காரணம், படத்தில் உள்ள குழந்தை இயேசுவின் முகம், ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் முகச்சாயலில் இருப்பதுதான். சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவரும் இந்த சிலையை குறித்து நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக தங்கள் கருத்துகளை பதிவிட்டும், சிலர் மீம்களை பகிர்ந்தும் வருகின்றனர்.

ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி, 'குழந்தை இயேசுவின் சிற்பம் மார்க் ஜுக்கர்பெர்க் போல் தெரிகிறது' என்று குறிப்பிடவே, இவ்விவகாரம் தற்போது ட்விட்டரில் சூடுபிடித்துள்ளது. அதேவேளையில் கிறிஸ்துவர்களால் புனிதமாக போற்றப்படும் குழந்தை இயேசுவின் சிற்பத்தை விமர்சனத்துக்கு இடங்கொடாமல் வடிவமைத்திருக்க வேண்டாமா எனவும் சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இதுதான் சாக்கு என்று மார்க் ஜுக்கர்பெர்க்கையும் ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் குறிப்பிடுகையில், 'குழந்தை இயேசுவின் சிற்பம் மார்க் ஜுக்கர்பெர்க் போல் தெரியலாம்; ஆனால் அவரது ஆன்மா நிச்சயமாக இயேசுவை போல் இல்லை. ஏனெனில் மார்க் ஜுக்கர்பெர்க் தான் சம்பாதிப்பதற்காக பயனர்களின் தரவுகளை விற்பவர்' என அவர் விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: காலையில் எழுந்ததும் சிறுநீரைதான் குடிப்பேன்” - யூரோ தெரப்பி கொடுக்கும் இந்த நபர் யார்?