உலகம்

மூன்றே மாதங்களான குழந்தைகளை நிற்க பழக்கும் நீச்சல் பயிற்சி

webteam

ஐஸ்லாந்து நாட்டில் மூன்று மாத குழந்தைகளை நிற்கப் பழக்கும் நீச்சல் பயிற்சி பிரபலமடைந்து வருகிறது.

3 மாத குழந்தைகளை நிற்க பழக்க ஐஸ்லாந்து நாட்டில் 12 வார நீச்சல் பயிற்சி நடைபெற்று வருகிறது. ஸ்னோரி மோக்னுசன் என்பவர் வாரம் இருமுறை இந்த பயிற்சியை அளித்து வருகிறார். குழந்தைகளின் தந்தையின் உள்ளங்கையில் நிற்க வைத்துப் பழக்குகிறார்.

இந்தப் பயிற்சிக்கு வரும் ஒரு குழுவில் உள்ள 12 குழந்தைகளில் 11 குழந்தைகள், 15 விநாடிகள் வரை தானாக நிற்கின்றனர். மீதமுள்ள ஒரு குழந்தை 8 விநாடிகள் மட்டுமே தானாக நிற்ப்பதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து பயிற்சியாளர் ஸ்னோரி கூறும்போது, குழந்தைகள் நாம் நினைப்பதைவிட அதிகம் செய்யக்கூடியவர்கள். அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்தால், விரைவில் கற்றுக் கொள்வார்கள். குழந்தைகள் 9 மாதத்தில் யாருடைய துணையும் இல்லாமல் தானாக நிற்க முடியும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்ததாகக் கூறினார்.