2022ம் ஆண்டின் கடைசி மாதத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். 2023ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன. புது ஆண்டுக்கான ஜோசியம் பார்க்கும் படலம் ஏற்கெனவே தொடங்கியிருக்கும். அதேபோல ஆண்டுதோறும் மாறாத ஒரு வழக்கமாகவே இருக்கிறது பாபா வாங்காவின் கணித்து குறித்த தகவல்கள்.
ஒவ்வொரு ஆண்டின் முடிவின் போது அடுத்து பிறக்கப்போகும் ஆண்டில் என்ன மாதிரியான உலகளாவிய அரசியல் நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் வெளியாவதுண்டு. ஏனெனில், பாபா வாங்காவின் கணிப்புகள்படி பல சம்பவங்களும் நடைபெறுவதால் அவரது கணிப்புக்கு பலரிடத்திலும் வரவேற்பு இருந்தே வருகிறது.
9/11-ல் அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டையானா இறப்பு, பராக் ஒபாமா அதிபரானது, பிரெக்சிட் வழக்கு இப்படியான பல சம்பவங்கள் பாபா வாங்காவின் கணிப்புப்படியே நடந்திருக்கிறது.
அந்த வகையில் 2023ம் ஆண்டிலும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்பு வெளியாகியிருக்கிறது. அதில், உலகில் உள்ள அணு உலைகள் உருகுவதால் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம் ஏற்படுமாம். ஒருவேளை பாபா வாங்காவின் கணிப்பு படி பூமியில் சிறிய மாற்றம் நடந்தால்கூட அது கால நிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இதுபோக, சூரியனை நோக்கி பூமி நகர்ந்தால் கதிர்வீச்சு அதிகமாகி புவியில் வெப்பநிலை அதிகரித்து சோலார் சுனாமி என்ற சூரிய புயல் வீசக்கூடுமாம். அதேபோல சூரியனை விட்டு பூமி விலகினால் பனி யுகத்திலும் அடர்ந்த இருளிலும் மூழ்கக் கூடிய கதி நேரலாம்.
இதனால் தகவல் தொடர்ந்து தோல்விகளுக்கு வழிவகுக்கும்.
இதனையடுத்து, மக்கள் மீது உயிரியல் ரீதியான பயோ வாரை உலகின் மிகப்பெரிய நாடு மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வாங்க கணிப்பு எச்சரிக்கிறது. மேலும், 2023-ல் அணுமின் நிலையம் வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைனில் ஒரு பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாகவும், "அணு ஆயுத அச்சுறுத்தல்" விடுப்பதாக உக்ரைன் ரஷ்யாவை குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ALSO READ:
அடுத்தபடியாக, இயற்கை முறையிலான குழந்தை பெற்றெடுப்புக்கு தடை விதிக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் ஆய்வகங்களில் பெற்றோர்கள் தங்களுக்கான குழந்தைகள் எந்த நிறத்தில் உருவ அமைப்பில் இருக்க வேண்டும் என தேர்வு செய்துக்கொள்ளும் வகையில் இருக்கும் என்றும் பாபா வாங்கா கணிப்பில் கூறப்பட்டிருக்கிறதாம்.
யார் இந்த பாபா வாங்கா?
வாங்கெலியா குஸ்டெரோவ்-ஆக பிறந்த இந்த பாபா வாங்கா பல்கேரியாவை சேர்ந்தவராவார். பாபா வாங்கா என்ற இந்த பெண் தனது 12 வயதில் பார்வையை இழந்திருக்கிறார். அதன் பிறகு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் இவருக்கு இருந்ததாகவும், இவர் கணித்தால் 85 சதவிகிதம் நடக்கும் என்றும் நம்பப்படுகிறது. 1996ம் ஆண்டே இறந்திருந்தாலும் 5079ம் ஆண்டு வரைக்குமான எதிர்காலத்தை பாபா வாங்கா கணித்திருக்கிறாராம். இதன் மூலம் உலகம் 5079ம் ஆண்டு வரை இயங்கும் என்பது அறிய முடிகிறது.
ALSO READ: