உலகம்

கணிப்பு தப்பா போச்சே: புத்தகத்தை முழுங்கிய எழுத்தாளர்!

கணிப்பு தப்பா போச்சே: புத்தகத்தை முழுங்கிய எழுத்தாளர்!

webteam

பிரிட்டன் தேர்தல் குறித்து தனது கணிப்பு தவறாகப் போனதால் தான் எழுதிய புத்தகத்தை தின்று முழுங்கினார் எழுத்தாளர். இந்த சம்பவம் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

பிரிட்டனில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் தொழிலாளர் கட்சிக்கு, 38 சதவீதத்துக்கு குறைவான ஓட்டுகளே கிடைக்கும் என்று பிரபல எழுத்தாளர் மேத்யூ குட்வின் கணித்திருந்தார். கணிப்பு நடக்காவிட்டால், தான் எழுதிய புத்தகத்தை தின்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு 40.3 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. மேத்யூவின் கணிப்பு பொய்த்துப் போனதை அடுத்து சமூக வலைதளங்களில் மேத்யூ கிண்டலடிக்கப்பட்டார். 

இந்நிலையில் தனியார் டிவியின் நேரடி நிகழ்ச்சியில் தோன்றிய மேத்யூ 'என் கணிப்புக்கு மாறாக, 2 சதவீத ஓட்டுகளை, தொழிலாளர் கட்சி அதிகம் பெற்றுள்ளது. இதான் நான் சொன்னபடி, எழுதிய புத்தகத்தை தின்று விடுகிறேன்’ என்று கூறிய மேத்யூ புத்தகத்தை கடித்து முழுங்கினார்.