நாளை இந்தியாவில் சுதந்திரதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்திய மக்களுக்கு தனது சுதந்திரதின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது வாழ்த்துகளை தெரிவிக்க ஹிந்தி வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் “ இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான நட்பு என்பது நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் சாதூரித் தன்மையைக் கடந்தது.இந்த ஆழமான நட்பு மரியாதை மற்றும் நம்பிக்கையால் நிறுவப்பட்டது. இவற்றில் ஜனநாயகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை அடங்கும். இந்தியாவுடன் நீண்ட கால நண்பராக இருக்கும் ஆஸ்திரேலியா, இந்தியாவில் சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் இணைகிறது. இந்திய மக்களுக்கு எங்களின் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
எங்களது மிகப்பெரிய பலமாக இந்தியாவிலிருந்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விளங்குகிறார்கள். அவர்கள் எங்களது நாட்டை பன்முக கலாச்சார நாடாக மாறியதற்கு பெரும் பங்கை ஆற்றியுள்ளனர். இந்த ஆண்டு ஜீன் மாதம் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டவை இருதரப்பு உறவுகளை உயர்த்துவதாக அமைந்துள்ளது. எங்களது கூட்டாண்மை உலகத்தின் நன்மைக்காக உதவும். குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம், மக்களின் உடல் நலம் ஆகியவை இந்த கூட்டாண்மை மூலம் சமாளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.