உலகம்

சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் விவகாரம்: பிரதமர் மோடியுடன் விவாதித்த ஆஸ்திரேலிய பிரதமர்

சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் விவகாரம்: பிரதமர் மோடியுடன் விவாதித்த ஆஸ்திரேலிய பிரதமர்

Veeramani

பேஸ்புக் மற்றும் கூகிள் போன்ற டிஜிட்டல் தளங்கள், உள்நாட்டு ஊடகங்களுக்கு பணம் செலுத்த கட்டாயப்படுத்தும் சட்டம் குறித்து இந்திய பிரதமர் மோடியுடன் விவாதித்தாக  ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.

"ஆஸ்திரேலியா என்ன செய்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்," என்று அவர் கூறினார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த நிலைமை குறித்து ஏற்கனவே பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆஸ்திரேலிய அரசாங்கமும் பேஸ்புக்கும் இன்று அதிக அளவில் விவாதங்களை நடத்தியது. பேஸ்புக் தனது ஆஸ்திரேலிய பயனர்களுக்கான செய்திகளை இருட்டடிப்பு செய்த பின்னர், சமூக ஊடக தளத்திற்கு எதிராக உலகளாவிய சீற்றத்தைத் தூண்டியது.

பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற தளங்கள், தனது தளத்தில் இருக்கும் செய்தி உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்த வேண்டிய புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதில் இருந்து பின்வாங்க ஆஸ்திரேலிய அரசு மறுத்துவிட்டது. இதனால் நேற்று, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதை எதிர்த்து பேஸ்புக், தனது ஆஸ்திரேலிய பயனர்களின் செய்தி ஊடகங்களின் பக்கங்களைக் காண்பிப்பதை நிறுத்தியது மற்றும் அதன் பயனர்களை செய்தி உள்ளடக்கத்தைப் பகிர அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய பெடரல் பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடன்பெர்க், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்குடன் நேற்று பேசியதாகக் கூறினார். "நாங்கள் அவர்களின் மீதமுள்ள பிரச்சினைகள் குறித்து பேசினோம், அந்தந்த அணிகள் உடனடியாக அதற்காக செயல்படும் என்று ஒப்புக்கொண்டோம்" என்று  கூறினார். இதுபற்றி பேசிய பிரதமர் மோரிசன் இது பேஸ்புக்கின் அச்சுறுத்தும் நடத்தை என்று குறிப்பிட்டார். மேலும் பேஸ்புக்கை "மீண்டும் தளத்துக்கு வாருங்கள்" என்றும் கேட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்த புதிய சட்டம், நியூஸ் மீடியாவுக்கு டிஜிட்டல் இயங்குதளங்கள் கட்டணம் செலுத்தும் வகையில் உள்ளது. இது இந்த வாரம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையால் நிறைவேற்றப்பட்டது, செனட் (மேல் சபை) திங்களன்று விவாதத்திற்கான மசோதாவை எடுத்துக் கொள்ளும். இந்த மசோதா அடுத்த வாரம் இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.