காட்டுத் தீயால் பேரழிவை சந்தித்த ஆஸ்திரேலியா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த 6 மாதங்களாக பற்றி எரிந்த காட்டுத்தீ, அண்மையில் பெய்த மழையால் கட்டுக்குள் வந்துள்ளது.
இதையடுத்து காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து புனரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் வசிக்கும் கர்ட் மென்செல் என்பவர், அதே பகுதியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு திருமண மண்டபத்தை வைத்துள்ளார்.
காட்டுத்தீயால் திருமண மண்டபம் கடுமையாக சேதமடைந்த நிலையில் காப்பீட்டு நிறுவனத்தின் உதவியுடன் சேதமடைந்த திருமண மண்டபத்தை சீரமைத்துவருகிறார்.
மண்டபத்தில் அடுத்த 18 மாதங்களுக்கு 120 திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறும் மென்செல், காட்டுத்தீ பாதிக்கப்பட்ட பல இடங்களில் மரங்கள் துளிர்விட்டு வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.