உலகம்

தவறாக அச்சடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பணம் : ஒருவருடத்திற்கு பின் கண்டுபிடிப்பு

தவறாக அச்சடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பணம் : ஒருவருடத்திற்கு பின் கண்டுபிடிப்பு

webteam

ஆஸ்திரேலியாவின் 50 டாலர் நோட்டில் ஒரு வார்த்தை தவறாக அச்சிடப்பட்டிருப்பது ஒரு வருடத்திற்கு பின்னர் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் 50 டாலர் நோட்டில் ‘ரெஸ்பான்ஸிபிலிட்டி’ (responsibility) என்ற வார்த்தை தவறுதலாக ‘ரெஸ்பான்ஸிபில்டி’ (responsibilty) என்ற அச்சிடப்பட்டுள்ளது. இந்த நோட்டு கடந்த ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட டாலர் ஆகும். இதுபோன்று 184 மில்லியன் 50 டாலர் நோட்டுகள் கடந்த ஆண்டில் அச்சிடப்பட்டு ஆஸ்திரேலிய ரிவர்வ் வங்கியின் மூலம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இத்தனை நாட்கள் யாரும் பிழையை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் ஒருவர் அதிலிருக்கும் பிழையை கண்டறிந்துள்ளார். 

அத்துடன் இன்ஸ்டாகிராமில் அதனை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இது ஆஸ்திரேலிய ரிவர்வ் நிர்வாகத்திற்கு தெரிய, பிழை இருப்பது உண்மை தான் என ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டில் மட்டும் 227 மில்லியன் டாலர் அச்சிடப்பட்டதாகவும், அதில் 184 மில்லியன் 50 டாலர்கள் என்றும் கூறியுள்ளது. இந்த டாலர்கள் மக்களிடம் இருந்து திரும்பப் பெறப்படாது என்றும், அடுத்த முறை அச்சிடும் போது பிழை திருத்தப்படும் என்று ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.