உலகம்

சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூச்சி

சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூச்சி

jagadeesh

மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கூறி , மியான்மர் அரசுக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் தானே ஆஜராகப்போவதாக சூச்சி அறிவித்திருந்தார். இந்த நிலையில் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். 

அப்போது நீதிமன்றத்துகு வெளியே ஆங் சான் சூச்சிக்கு ‌ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. 2017ஆம் ஆண்டு மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐநாவும் இதனை இனப்படுகொலை என தெரிவித்தது. இந்த நிலையில் மியான்மருக்கு எதிராக காம்பியா அரசு தொடர்ந்த வழக்கு முதன்முறையாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவ‌ரான ஆங் சான் சூச்சி இனப்படுகொலை குற்றச்சாட்டில் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரானது விவாதப்பொருளாகியுள்ளது.