உலகம்

பெண்களை இழிவுபடுத்தும் ஆடி கார் விளம்பரம்: புதிய சர்ச்சை!

webteam

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, உலக அளவில் பிரபலமான சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், சீனாவில் வெளியாகியுள்ள ஆடி கார் விளம்பரம் அந்நாட்டு மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் வெளியாகியுள்ள ஆடி கார் விளம்பரத்தில் திருமணம் நடக்கவிருக்கும்போது திடீரென மணமேடையில் நுழையும் மணமகனின் தாய், இது பயன்படுத்திய கார் என்பது தானா எனக் கண்டறியும் சோதனை செய்வதுபோல் மணப்பெண்ணின் மூக்கு, காது மற்றும் பற்களைப் பிடித்து இழுத்து சோதனை செய்கிறார். பின், திரும்பிச் செல்லும் அவர் இறுதியில் தரமானது எனத் தெரிவித்து ஒரு முக்கியமான முடிவினை கவனமாக எடுக்க வேண்டும் என சைகையால் கூறுவது போன்று விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த விளம்பரம் பாலியல் பாகுபாட்டுடன் பெண்களை இழிவுப்படுத்துவதுபோல் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சிக்கின்றனர். மேலும், ஆடி காரைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், இந்த விளம்பரத்திற்காக அந்நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஆடி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சீனாவில் ஆடி காரை விளம்பரப்படுத்துவது உள்ளூர் கார் டீலரின் பொறுப்பு என பதிலளித்துள்ளார்.