உலகம்

டிக்டாக் தடை முயற்சி கைவிடப்படுகிறது: அமெரிக்கா அறிவிப்பு

டிக்டாக் தடை முயற்சி கைவிடப்படுகிறது: அமெரிக்கா அறிவிப்பு

Veeramani

அமெரிக்காவில், டிக்டாக், விசாட் செயலிகளுக்கு தடை விதிக்க முயற்சிக்கும் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுகள் கைவிடப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவுடன் பிணைக்கப்பட்ட மென்பொருள் பயன்பாடுகளுடன் தேசிய பாதுகாப்புக்கு அபாயம் உள்ளதா? என்பதை அடையாளம் காணும் நோக்கில் அமெரிக்கா சொந்த மதிப்பாய்வை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவால் தயாரிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்படும் பயன்பாடுகளை உள்ளடக்கிய செயலிகளின் பரிமாற்றங்கள் குறித்து ஆதார அடிப்படையில் வர்த்தகத் துறை பகுப்பாய்வு மேற்கொள்ளும் என்றும் வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டும் செயலிகள், சீன ராணுவம் அல்லது உளவுத்துறை நடவடிக்கைகளுடன் தொடர்புடையனவா என்பது பற்றிதான் அதிகாரிகள் கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கர்களின் மரபணு மற்றும் தனிப்பட்ட சுகாதார தகவல்களை எவ்வாறு பாதுகாப்பு என்பது குறித்து வர்த்தகத்துறை பரிந்துரை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா அல்லது பிற விரோதிகளுடன் இணைக்கப்பட்ட சில மென்பொருள் பயன்பாடுகளின் அபாயங்களை அமெரிக்க வர்த்தகத்துறை நிவர்த்தி செய்யும் என்று அதிபர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.