உலகம்

உலக அமைதிக்கான மாரத்தான்: 47,000 பேர் பங்கேற்பு

webteam

லெபனானில் உலக அமைதியை வலியுறுத்தி நடந்த மாரத்தான் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 47,000 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ஆசிய தடகள சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பெய்ஜிங் மாரத்தான் போட்டி நடத்தப்படும். இதைத்தொடர்ந்து பெய்ரூட் மாரத்தான், சியோல் மாரத்தான் ஆகிய போட்டிகளையும் ஆசிய தடகள சங்கம் நடத்துகிறது. அவ்வாறு நடத்தப்படும் பெய்ரூட் மாரத்தான் போட்டியில், ஒவ்வொரு முறையும் விளையாட்டை கடந்து அரசியல் சார்ந்த விஷயங்கள் வலியுறுத்தப்படுகின்றன.

அந்த வகையில் இந்தாண்டு நடத்தப்பட்ட பெய்ரூட் மாரத்தான் போட்டியில், சவுதியில் உள்ள லெபனான் பிரதமர் ஹரிரி தாய்நாடு திரும்ப வலியுறுத்தி பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டன. அத்துடன் உலக அமைதியை வலியுறுத்தியும், உலக அளவில் லெபனான் மீது நன்மதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இப்போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 47,000 பேர் ஆர்வத்துடன் பங்கேற்று ஓடினர்.