கத்தார் நாட்டுடனான உறவை மீண்டும் தொடர்வதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரபு நாடுகள் தளர்த்தியுள்ளன.
முதலில் 13 நிபந்தனைகளை விதித்திருந்த அரபு நாடுகள், தற்போது அதை ஆறாக குறைத்துள்ளன. பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண இந்த நிபந்தனைகளை கத்தார் அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் அவை கூறியுள்ளன. பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் துண்டித்தன. பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால் மீண்டும் உறவைத் தொடரத் தயார் என்று கூறிய அந்த நாடுகள் அதற்காக 13 நிபந்தனைகளை விதித்தன. இதை கத்தார் ஏற்க மறுத்ததால், நிபந்தனைகளை தளர்த்தியுள்ளன.