அநுரா குமார திஸநாயக பதவியேற்பு எக்ஸ் தளம்
உலகம்

இலங்கையின் 9 ஆவது அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திஸநாயக!

இலங்கை நாட்டின் 9ஆவது அதிபராக தேசிய மக்கள் சக்தி முன்னணியை சேர்ந்த அநுரா குமார திஸநாயக பதவியேற்றார்.

PT WEB

இலங்கை நாட்டின் 9ஆவது அதிபராக தேசிய மக்கள் சக்தி முன்னணியை சேர்ந்த அநுரா குமார திஸநாயக பதவியேற்றார்.

கொழும்புவில் அதிபர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற விழாவில் புதிய அதிபராக அநுரா குமார திஸநாயக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை அதிபர் அநுரா குமார திஸநாயக

இதன் மூலம் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இடதுசாரி முன்னணியை சேர்ந்த அதிபர் என்ற பெருமையை பெற்றார். அதிபராக பதவியேற்ற பின், உரையாற்றிய திஸநாயக “அனைத்து நாடுகளுடனும் ஒன்றிணைந்து செயல்படுவேன்” என கூறினார். அதிபராக பதவியேற்ற திஸநாயகவுக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரலாற்றில் முதல் சுற்றில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், நேற்று இரண்டாவது சுற்று விருப்ப வாக்கு எண்ணிக்கை நடந்திருந்தது. அதில் அநுரா குமார திஸநாயக வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இரண்டாவது இடத்தையும், முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

அநுரா குமார திஸநாயக - இலங்கை அதிபராக பதவியேற்ற பின்...

இதனிடையே இலங்கை பிரதமர் பதவியை தினேஷ் குணரத்ன ராஜினாமா செய்தார். புதிய அதிபர் பதவியேற்கும் முன்பே அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார். புதிய அதிபர் பதவியேற்பை அடுத்து, இலங்கை நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு புது நாடாளுமன்ற குழு அமைக்கப்படும்.