இலங்கை அதிபர் அநுர குமரா முகநூல்
உலகம்

இலங்கை அதிபரான அநுர குமரா திசநாயக மீது தமிழர்களின் பார்வை எப்படி உள்ளது?

PT WEB

செய்தியாளர்: ராஜ்குமார்

கம்யூனிஸ்ட் கொள்கையைக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன கட்சியில் 1987ஆம் ஆண்டில், மாணவர் பருவத்திலேயே அநுர குமரா திசநாயக, தன்னை இணைத்துக் கொண்டார். 1995ஆம் ஆண்டு அக்கட்சியின் பொலிட்பீரோவில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், 5 ஆண்டுகள் கழித்து 2000ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

2004ஆம் ஆண்டு சந்திரகா குமாரதுங்க அமைச்சரவையில் இடம்பெற்றார். நீண்ட அரசியல் பயணத்தின் பலனாக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவராக 2014-ல் திசநாயக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜே.வி.பி.யின் மக்கள் தேசிய கட்சி அமைப்பின் செயல்பாடுகள் மூலம் படிப்படியாக மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுவந்த திசநாயக, தமது 59ஆவது வயதில், இலங்கையின் 9ஆவது அதிபராக பதவியேற்றுள்ளார்.

அவரது வெற்றியை இலங்கையில் பலர் கொண்டாடி வருகிறார்கள். சிவராச இலக்கியதாஸ், மக்கள் தேசிய சக்தி தமிழர்களின் பிரச்னைகளுக்கு சிங்கள பிரதிநிதிகள் குரல் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் திசநாயக முன், வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் சிறுபான்மையினரையும் இவர் எப்படி கையாள்வார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

“ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்றவை தமிழர்களுக்கு குரல் கொடுப்பது போல் நாடகமாடுவார்கள். ஆனால், ஜே.வி.பி. கட்சி அந்த பக்கமே வந்ததில்லை”
மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர்.

அதேநேரம் “தமிழர்களுக்கு ஆதரவாக அநுர திசநாயக செயல்பட்டதில்லை. இருப்பினும் ஈழத்தில் இறுதிக்கட்ட போரின்போது, ‘போர் தேவையற்றது’ என்ற கருத்தை அவர் கூறியிருந்தார்” என தெரிவிக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

இலங்கையில் 55.89 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ள திசநாயகவுக்கு, நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டிய மிக முக்கிய சவால் காத்திருக்கிறது. அந்நாட்டின் ஜி.டி.பி இரண்டாம் காலாண்டில் 5.3-ல் இருந்து 4.76 சதவீதமாக வீழ்ந்து கிடக்கிறது.

அநுரகுமார திஸாநாயக

அதனை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வதும், சுற்றுலா பயணிகள் வருகையின் மூலம் நாட்டின் வருவாய் கணிசமாக உயர்த்துவதும் அவருக்கு முன் உள்ள சவால்கள். வேலை வாய்ப்பு, இனவாதம் அற்ற சமுதாயம், வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு ஆகியவற்றை ஏற்படுத்துவதும் புதிய அதிபர் அநுர குமரா திசநாயக முன் உள்ள சவால்கள்.