உலகம்

நிறம்மாறும் ஏரி; காரணம் என்ன..?

நிறம்மாறும் ஏரி; காரணம் என்ன..?

webteam

சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள ஏரியின் நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிவருகிறது. 

சீன நாட்டின் ஷாங்சி மாகாணத்தில் யான்சென் என்னும் இடத்தில் உள்ள dead sea என அழைக்கப்படும் ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி வருவதால், அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 500 மில்லியன் வயதுடைய இந்த ஏரி ஒரு பக்கம் இளஞ்சிவப்பு நிறத்திலும் மற்றொரு பக்கம் பச்சை நிறத்திலும் காட்சியளிக்கிறது. இந்த ஏரியில் உள்ள தண்ணீர் மிகவும் உவர் தன்மையுடன் காணப்படுகிறது.

ஏரியின் நிறமாற்றத்திற்கு காரணம் டுனாலியேல்லா சலினா என்ற பாசியானது நீரின் நிறத்தை மாற்றுகிறது. இது ஏரிகளில் நிகழும் இயற்கையான நிகழ்வு ஆகும். இளஞ்சிவப்பு நிறமானது வெப்பநிலை மற்றும் ஒளியின் தீவிரத்தன்மையால் திடீரென சிவப்பு நிறமாக மாறுகிறது. உலகிலே அதிகம் உப்பு உள்ள ஏரிகளில் யான்சென் ஏரி மூன்றாவது இடத்தில் உள்ளது. பார்ப்பதற்கு அழகாகவும், வித்தியாசமாகவும் காட்சியளிப்பதால், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதாக கூறப்படுகிறது.