உலகம்

இந்திய உணவகமான "சாய் பானி" அமெரிக்காவின் சிறந்த உணவகமாக தேர்வு

இந்திய உணவகமான "சாய் பானி" அமெரிக்காவின் சிறந்த உணவகமாக தேர்வு

ச. முத்துகிருஷ்ணன்

வட கரோலினாவில் இயங்கி வரும் இந்திய உணவகமான “சாய் பானி”, அமெரிக்காவின் சிறந்த உணவகத்திற்கான விருதை வென்றுள்ளது.

ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை சார்பாக உணவு விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக விருது விழா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு வழக்கம்போல உணவு விருதுகள் சிகாகோவில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் சிறந்த உணவகமாக வட கரோலினாவில் மலிவு விலையில் இந்திய சிற்றுண்டி உணவுகளை வழங்கும் “சாய் பானி” தேர்வு செய்யப்பட்டது. சிறந்த புதிய உணவகமாக மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும் “ஓவாம்னி” தேர்வு செய்யப்பட்டது. சிறந்த சமையல்காரராக மஷாமா பெய்லியும், வளர்ந்து வரும் சமையல்காரராக எட்கர் ரிகோவும் தேர்வு செய்யப்பட்டனர்.