உலகம்

யூடியூப் மூலம் ரூ.185 கோடி சம்பாதித்த 8வயது சிறுவன்!

webteam

பொழுதுபோக்காக மட்டுமின்றி வருமானத்தையும் ஈட்டிதரும் பிரபல சமூகவலைதளமான யூடியூப் மூலம் அமெரிக்காவை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் 185 கோடி ரூபாய் சம்பாதித்து 2019 ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த நபர்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ரியான் காஜி என்ற சிறுவன், பெற்றோர்கள் உதவியுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு ரியான் டாய்ஸ் ரிவியூவ் என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் குழந்தைகளுக்கான புதிய மற்றும் வித்தியாசமான விளையாட்டு சாதனங்கள் குறித்து விளையாடிக்கொண்டே விமர்சனம் செய்திருக்கிறார்.

ஆரம்பத்தில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும் நாட்கள் செல்‌ல ரியான்‌ யூடியூப் பக்கத்தில் பேசும் பொரு‌ளாக மாறினார். அதன்பின் ரியானின் யூடியூப் சே‌னலை பின் தொடர்‌பவர்களின் எண்ணிக்கை‌ அதிகரிக்க தொடங்கியது. தற்போது 23 மில்லியன் பேர் பின் தொடரும் நிலையில், சுமார் 185 கோடி ரூபாய் வரை யூடியூப்பில் சம்பாதித்துள்ளார் ரியான்.

2019 ஆண்டியில் யூடியூப் மூலம் அதிகம் ‌‌சம்பாதித்த நட்சத்திரங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ரியான் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டிலும் 157 கோடி ரூபாய் சம்பாதித்து ரியான் காஜி தான் முதலிடத்தை பிடித்திருந்தார். இவரை தொடர்ந்து‌ 139 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி, இரண்டாவது இடத்தில் Dude Perfect என்ற யூடியூப் சேனல் இடம்பிடித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 5 வயது சிறுவன் Nastya வின் யூடியூப் சேனல் 120‌ கோடி ரூபாய் சம்பாதித்து மூன்றாவது இடத்தில் உள்ளது