உலகம்

வடகொரியாவை விட்டு அமெரிக்கர்கள் வெளியேறுங்கள்: அமெரிக்க அரசு அறிவிப்பு

வடகொரியாவை விட்டு அமெரிக்கர்கள் வெளியேறுங்கள்: அமெரிக்க அரசு அறிவிப்பு

webteam

வடகொரியாவை விட்டு‌ அமெரிக்கர்கள் அனைவரும் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் வெளியேறுங்கள் என அமெரிக்க அறிவித்துள்ளது.

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை சமீபத்தில் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வடகொரியாவுக்கு பயணம் செய்யவோ, வடகொரியா வழியாக வேறு நாடுகளுக்கு பயணம் செய்யவோ அமெரிக்கர்களுக்கு அனுமதி கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதையும் மீறி அமெரிக்க குடிமகன்கள் யாரேனும் வடகொரியா செல்ல விரும்பினால் சிறப்பு அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.