உலகம்

”ஒவ்வொரு நாளும்.. ஒவ்வொரு நொடியும்” 365 நாட்களையும் லைவ் ஸ்ட்ரீம் செய்த அமெரிக்க இளைஞர்

EllusamyKarthik

‘ஹாய்… 2019இல் என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், ஏன்? ஒவ்வொரு நிமிஷமும் நான் லைவ் ஸ்ட்ரீம் செய்திருக்கேன்’ என கெத்தாக சொல்கிறார் இளைஞர் ஒருவர். 

அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் ஜெர்ரி கடந்த 2019 ஆம் ஆண்டு முழுவதும் தனது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளார். காலேஜ் டிராப் அவுட்டான அவர் ஒரு பொழுதுபோக்காகவே இதை செய்ததாக தெரிவித்துள்ளார். 

‘காலேஜில் இருந்து நின்றதும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தேன். சமயங்களில் தற்கொலை முடிவு வரை கூட சென்றுள்ளேன். அப்போது தான் ஏரியா இந்தோவாங் என்பவர் தனது அன்றாட வாழ்வை ஒரு வார காலத்திற்கு லைவ் ஸ்ட்ரீம் செய்திருந்தார். அதை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் லைவ் ஸ்ட்ரீம் செய்ய 2019 ஜனவரியில் முடிவு செய்தேன். 

அதன் படி எனது வீட்டின் அனைத்து பகுதிகளிலும் கேமிராவை வைத்ததோடு, எனது தோளில் கேமிராவை பிக்ஸ் செய்து கொண்டு அனைத்தையும் ஸ்ட்ரீம் செய்தேன். இன்றைய டிஜிட்டல் உலகின் இணைய வாசிகள் தான் எனது பார்வையாளர்கள். 

இந்த ஒரு வருடத்தில் என வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன’ என அவர் தெரிவித்துள்ளார். 

நண்பர்களோடு நேரத்தை செலவிடுவதில் ஆரம்பித்து தன் வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் இதில் பகிர்ந்துள்ளார்  அவர்.