american trekkers body x page
உலகம்

பெரு|மலையேறிய அமெரிக்க வீரர் பனியில் சிக்கி மாயம்; மம்மி ஆக உறைந்த உடல் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

Prakash J

தென் அமெரிக்க நாடான பெருவில், சுமார் 22 ஆயிரம் அடி உயரத்தில் 'ஹவாஸ்கரான்' என்ற மலை அமைந்துள்ளது. இந்த மலைக்குச் சுற்றுலாப் பயணிகளும், மலையேற்ற வீரர்களும் அடிக்கடி செல்வதுண்டு. அந்த வகையில், கடந்த 2002-ஆம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்பிள் என்ற மலையேற்ற வீரர், தனது குழுவினருடன் மலையேற்றம் கண்டார். அப்போது பனிச்சரிவில் சிக்கி மாயமானார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அவரைப் பற்றி தேடுதல் பணி தொடங்கப்பட்டது. ஆயினும், நீண்டநாட்களாக தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது. அதாவது, லிமாவிலிருந்து வடக்கே 400 கிமீ தொலைவில் உள்ள அன்காஷ் பகுதியில் அவரது ஏறும் பயணம் வழிமாறியதால், ஸ்டாம்பிளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: ஹிஜாப் அணிய மறுத்த பெண்கள்.. துருக்கியின் விமான நிறுவன அலுவலகத்தை மூடிய ஈரான்!

இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் ஸ்டாம்பிளின் உடல் ஹவாஸ்காரன் மலையில் உள்ள கார்டிலெரா பிளாங்கா மலைத்தொடரில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவரது உடல், உடைகள், மலையேற்றக் கருவிகள் மற்றும் காலணிகள் ஆகியவை பனியில் உறைந்து பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடைமைகளில் இருந்த பாஸ்போர்ட் மூலம் வில்லியம் ஸ்டாம்பிளினை போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் படிக்க; சூடுபறக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் | ஜோ பைடனுக்கு சவால் விட்ட டொனால்டு ட்ரம்ப்!