அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றியடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெற்றிபெற 270 வாக்குகள் தேவை என்ற நிலையில் 248 வாக்குகள் பெற்று ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். இந்தநிலையில், பெரும்பான்மையான 270 இடங்களை விட கூடுதலாக பெற்று ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார் என்று அந்நாட்டு செய்தி நிறுவனமான ஃபாக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக குடியரசுக்கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதையறிந்து, “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே” என முழங்கினார் டொனால்ட் ட்ரம்ப். விரைவில் பதவியேற்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால், ட்ரம்பின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர்.
உலகமே எதிர்பார்த்து காத்திருந்து அமெரிக்காவின் 47 ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றைய தினம் நவம்பர் 5 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகி வருகிறது. அசோசியேட் பிரஸ் (Associated Press) உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்கள் முடிவுகளை அறிவிக்க தொடங்கி உள்ளன.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்தவகையில் அமெரிக்கா அதிபர் தேர்தலில் முதற்கட்ட முடிவுகள் வெளியாகி வருகிறது. அதில், மொத்தமுள்ள 538 எலக்ட்டோரல் வாக்குகளில் குடியரசு கட்சியின் சார்பில் களத்தில் உள்ள டொனால்ட் ட்ரம்ப் 101 எலக்ட்டோரல் வாக்குகளில் முன்னிலை வகித்து வருகிறார். ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் உள்ள கமலா ஹாரிஸ் 71 எலக்ட்டோரல் வாக்குகளையும் பெற்றுள்ளார்.
இதன்படி கெண்டகி, இண்டியானா, வெர்மாண்ட் உள்ளிட்ட 10 மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் உள்ள கமலா ஹாரிஸ் வெர்மாண்ட் மாநிலத்தை கைப்பற்றியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 538 எலக்ட்டோரல் வாக்குகளில் குடியரசு கட்சியின் சார்பில் களத்தில் உள்ள டொனால்ட் ட்ரம்ப் 178 எலக்ட்டோரல் வாக்குகளையும் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் உள்ள கமலா ஹாரிஸ் 99 எலக்டோரல் வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார். அதாவது, ட்ரம்பை விட வாக்குகளும் குறைவாகவே பெற்றிருக்கிறார்.
இந்தவகையில், தற்போதையை நிலவரப்படி, கமலா ஹாரிஸை விட ட்ரம்ப் 80 எலக்ட்டோரல் வாக்குக்களைப்பெற்று முன்னிலையில் உள்ளார்.
சரி, அதென்ன ‘எலக்டோரல் காலேஜ்?’ (எலக்ட்டோரல் வாக்குகள்)
அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.
சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 54 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.
ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றால், அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் முழுவதும் வெற்றி வேட்பாளரை சென்றடையும்.
மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தலில் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றிபெற்றார். இலினாய்ஸ் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிப்பெற்றார் ராஜா கிருஷ்ணமூர்த்தி.
ட்ரம்ப் 198 எலக்ட்டோரல் வாக்குகளையும் (53%), கமலா ஹாரிஸ் 112 எலக்ட்டோரல் வாக்குகளையும் (46%) முன்னிலை வகிக்கின்றனர். இதனால்,ட்ரம்ப்பிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இன்னும் 2, 3 மணி நேரத்தில் முழு விவரம் தெரியவரும். 6 மாகாணங்களில் இன்னும் வாக்குப்பதிவு முடியவில்லை என்பதால் அங்கு வாக்கு எண்ணும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
இன்று மாலைக்குள் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என தெரியவரும் எனக்கூறப்பட்டுள்ளது. தற்போதையை (இந்திய நேரப்படி காலை 9.40 மணி) நிலவரப்படி, பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்கிற பட்சத்தில், ட்ரம்ப் 214 எலக்ட்டோரல் வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 179 எலக்ட்டோரல் வாக்குகளையும் பெற்றுள்ளதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், மொத்தமுள்ள 50 மாகாணங்களில் அதிகபட்சமாக 54 எலக்டோரல் வாக்குகள் கொண்ட கலிபோர்னியா மாகாணத்தை கைப்பற்றியிருக்கிறார் கமலா ஹாரிஸ். இதன்மூலம்,கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்பிற்கும் எதிராக கடும் போட்டி நிலவி வருகிறது.
214 எலக்ட்டோரல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வரும் ட்ரம்ப், முன்னதாக அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான புளோரிடா மாகாணத்தில் தொடர்ந்து 3 வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய நேரம் காலை 10 மணி நிலவரப்படி, 230 எலக்ட்டோரல் வாக்குகளை பெற்று ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் 192 எலக்ட்டோரல் வாக்குகளை பெற்றிருக்கிறார்.
ட்ரம்ப் 5 கோடியே 77 லட்சம் வாக்குகளும், கமலா ஹாரிஸ் 5 கோடியே 30 லட்சம் வாக்குகளும் பெற்றிருக்கின்றனர். இதன்மூலம், கமலா ஹாரிஸை விட டொனால்ட் ட்ரம்ப் 50 லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
காலை 11 மணி நிலவரப்படி, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் - 230 எலக்ட்டோரல் வாக்குகளையும், குடியரசு கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் - 210 எலக்ட்டோரல் வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்தவகையில், தொடர்ந்து, ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
வயோமிங்- 3
மேற்கு வர்ஜீனியா -4
உட்டா - 6
டெக்சாஸ் - 40
டென்னசி - 11
தெற்கு டகோட்டா - 3
தென் கரோலினா - 9
ஓக்லஹோமா - 7
ஓஹியோ - 17
நெப்ராஸ்கா - 3
வடக்கு டகோட்டா - 3
வடக்கு கலிபோர்னியா - 16
மொன்டானா - 4
மிசிசிப்பி - 6
மிசூரி - 10
லூசியானா - 8
கென்டக்கி - 8
கன்சாஸ் - 6
இந்தியானா - 11
ஐடாஹோ - 4
லோவா - 6
புளோரிடா - 30
ஆர்கன்சாஸ் - 6
அலபாமா - 9
கொலராடோ - 10
கனெக்டிகட் - 7
டிசி - 3
டெலவேர் - 3
ஹவாய் - 4
இல்லினாய்ஸ் - 19
மாசசூசெட்ஸ் - 11
மேரிலாந்து - 10
மைனே - 1
நெப்ராஸ்கா - 1
நியூ ஜெர்சி -14
நியூ மெக்சிகோ - 5
நியூயார்க் - 28
ஒரேகான் - 8
ரோட் தீவு - 4
வர்ஜீனியா - 13
வெர்மான்ட் - 3
வாஷிங்டன் - 12
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிப்பெற இன்னும் 24 எலக்ட்டோரல் வாக்குகளே தேவைப்படுகின்றன. இந்தநிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் அரிசோனா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
இதற்கிடையே மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தலில் 9 இந்தியர்கள் போட்டியிட்ட நிலையில் இதுவரை இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.
விர்ஜினியா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி சுகாஸ் சுப்பிரமணியன் முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவரின் தந்தை சென்னையையும், தாய் பெங்களூருவையும் சேர்ந்தவர்கள்.
மேலும், இலினாய்ஸ் மாகாணத்தில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார் ராஹா கிருஷ்ணமூர்த்தி.
வெற்றிக்கு பிறகு செய்தியாளர் சந்தித்து மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றி வருகிறார் டொனால்ட் ட்ரம்ப்...
இதில் பேசிய அவர், "குடியரசுக்கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. இந்த இயக்கம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கான ஒரு அற்புதமான அரசியல் இயக்கமாக மாறியுள்ளது. இதனால் நாம் தற்போது வெற்றி வாகை சூடியுள்ளோம்.
நமது நாட்டிற்கு இப்பொழுது பெரிய உதவி தேவைப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். அமெரிக்காவை மகத்தான நாடாக மாற்றுவேன்.
நான் ஒவ்வொரு நாளும் உங்களின் உரிமைகளுக்காக போராடுவேன். அமெரிக்காவின் பொற்காலத்தை உருவாக்குவேன். மக்கள் என்னை நம்பிதான் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கை வீண்போகாது. இந்த நாள் எனது வாழ்நாளில் மிக முக்கியமான நாட்களில் ஒன்று. உலக நாடுகளில் போரை நிறுத்த நான் பாடுபடுவேன்.
வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவிக்க்கு நன்றி (என உணர்ச்சி பொங்க பேசினார்). இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி.
அமெரிக்கர்கள் கனவுகள் ஒவ்வொன்றும் மெய்ப்படும். அதிபர் தேர்தல் மட்டுமல்ல செனட் மக்கள் சபையிலும் நமக்கே முன்னிலை கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
விரைவில் ட்ரம்ப் பதவியேற்பார் என கணிக்கப்பட்டுள்ளது.