லாயன் வில்காக்ஸ் எக்ஸ் தளம்
உலகம்

"26.169 கி.மீ.. 108 நாட்கள்"-உலகிலேயே அதிவேகமாக சைக்கிள் பயணம் | புதிய சாதனை படைத்த அமெரிக்கப் பெண்!

Prakash J

உலகிலேயே அதிவேகமாக சைக்கிள் ஓட்டி சுற்றி வந்த பெண் என்ற புதிய சாதனையை லாயல் வில்காக்ஸ் என்பவர் படைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவரான இவர், 26.169 கி.மீ (18,125 மைல்கள்) சைக்கிள் பயணம் மேற்கொள்ள 108 நாட்கள் 12 மணி நேரம், 12 நிமிடம் எடுத்தார். இதன்மூலம், 2018ஆம் ஆண்டு சைக்கிள் வீரர் ஜென்னி கிரஹாம் 124 நாட்களில் 11 மணி நேரங்களில் கடந்த தூரத்தை, தற்போது வில்காக்ஸ் முறியடித்துள்ளார். அவர் சிகாகோவில் தனது சைக்கிள் பயணத்தைத் தொடங்கி, நியூயார்க் வரை சென்றுள்ளார்.

நியூயார்க்கிலிருந்து போர்ச்சுகலுக்குச் சென்ற அவர், அங்கிருந்து நெதர்லாந்திற்குப் புறப்பட்டார். இறுதியில் ஜெர்மனி, ஆல்ப்ஸ், பால்கன், துருக்கி மற்றும் ஜார்ஜியா வழியாக நியூயார்க் திரும்பினார். கின்னஸ் விதிகளின்படி, சைக்கிள் வீரர் குறைந்தபட்சம் 18 ஆயிரம் மைல்கள் சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும். மேலும், அதே இடத்தில் தொடங்கவும் மற்றும் முடிக்கவும் வேண்டும்.

சாதனை குறித்து வில்காக்ஸ், ''சில நேரங்களில் நான் உலகம் முழுவதும் சவாரி செய்கிறேன் என்பதை மறந்துவிடுவேன். சைக்கிளில் ஏறி அமர்ந்துவிட்டால் போதும்; பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.

என்றாலும், வில்காக்ஸின் சாதனை விரைவில் முறியடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவருடைய சாதனையை இந்திய வீரர் வேதாங்கி குல்கர்னி முறியடிப்பார் எனச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: AFG Vs NZ| 26 ஆண்டுகளில் முதல்முறை.. ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட டெஸ்ட்.. என்ன காரணம்?