உலகம்

பகவத் கீதை மீது சத்தியம் செய்து ஆளுநராக பதவியேற்ற அமெரிக்க வாழ் இந்தியர்!

பகவத் கீதை மீது சத்தியம் செய்து ஆளுநராக பதவியேற்ற அமெரிக்க வாழ் இந்தியர்!

webteam

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் பதவியேற்றிருக்கிறார்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராகி வரலாறு படைத்திருக்கிறார், அருணா மில்லர். இதையடுத்து இந்த மாகாணத்தின் ஆளுநராகப் பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையுடன் முதல் இந்தியர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். மேலும், இதன்மூலம் முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிறந்த அருணா மில்லர், தன்னுடைய தன்னுடைய 7வது வயதிலேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். பொறியாளரான அவரது தந்தை வேலைக்காக அமெரிக்கா சென்றபோது, தன் குடும்பத்தையும் அழைத்துச் சென்றார். தற்போது 58 வயதாகும் மில்லர், கடந்த ஆண்டு (2022) நவம்பரில் நடைபெற்ற மேரிலேண்ட் மாகாண துணைநிலை ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்றார். இதில், வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை மீது சத்தியம் செய்து அவர் பதவி ஏற்றார்.

பதவியேற்புக்குப் பின் பேசிய அருணா மில்லர், ''துணைநிலை ஆளுநராக தேர்வு செய்த மேரிலேண்ட் மக்களுக்கு நன்றி. இதன்மூலம் மேரிலேண்ட் என்னைப் பெருமை அடையச் செய்துள்ளது. என்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. நாம் தற்போது ஒரு வரலாற்றை உருவாக்கி இருக்கிறோம். அதிகாரம் வரலாற்றை உருவாக்குவதில்லை; மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. எனது இந்த வெற்றி நம் அனைவருக்குமானது'' என தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்