மெக்சிகோ உடனான முழு எல்லைப் பகுதியிலும் சுவர் எழுப்பும் பணிக்காக அமெரிக்க அரசு நான்கு கட்டுமான நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது.
மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைந்து வருபவர்களை தடுப்பதற்காக எல்லைப் பகுதியில் சுவர் எழுப்பப்படும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி முழு எல்லைப் பகுதியிலும் சுவர் எழுப்பும் பணிக்காக நான்கு கட்டுமான நிறுவனங்களை ட்ரம்ப் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. எல்லையில் அமையவுள்ள இந்த சுவர்கள் 30 அடி உயரத்திலும், 30 அடி அகலத்திலும் கட்டப்படும் என்றும் சான் டீகோவில் இதற்கான முதற்கட்ட சோதனை நடத்தப்படும் என்றும் ட்ரமப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு அண்டை நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.