உலகம்

அமெரிக்க துப்பாக்கிச் சூடு சம்பவம்: பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு

அமெரிக்க துப்பாக்கிச் சூடு சம்பவம்: பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு

webteam

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ஸ்டீபன் பட்டாக் என்பவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.

லாஸ்வேகாஸில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நேற்று இரவு நடன, இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த இசை நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். நட்சத்திர விடுதியின் மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் மீது அருகில் உள்ள கட்டடத்தின் 32-வது மாடியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அனைவரும் அலறி அடித்து ஓட, பலர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கீழே சரிந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் பட்டாக் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது தானியங்கி ரக தூப்பாக்கி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து லாஸ் வேகாஸ் நகரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.