முழுவதும் மின்சாரத்தால் இயங்கும், நீரில் இறங்கும் ஆற்றல் கொண்ட வர்த்தக் கடல் விமானம் கனடாவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
கனடா தலைநகர் வான்கூவரை சேர்ந்த ஹார்பர் ஏர் சீ பிளேன்ஸ் நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான MAGNIX என்ற நிறுவனமும் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் கடல் விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளன. 6 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த விமானம் கனடாவின் ரிச்மாண்ட் நகரில் சோதனை செய்யப்பட்டது.
தீவுகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த கடல் விமானத்தை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. நீரிலிருந்தே புறப்படும் இந்த விமானம் நீரிலேயே தரையிறங்குகிறது. சான்றிதழ் மற்றும் உரிமத்துக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும், 2022 ஆம் ஆண்டு முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு இந்த விமானம் வரும் என்றும் ஹார்பர் ஏர் சீ பிளேன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.