ஈரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் முக்கிய தளபதி இஸ்மாயில் ஹனியாவின் வீடு அருகே அல் ஜசீரா ஊடகத்தின் செய்தியாளர் இஸ்மாயில் மற்றும் ஒளிப்பதிவாளர் ரமி ஆகியோர் செய்தி சேகரித்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். வடக்கு காசாவில் உள்ள அகதி முகாம் அருகே அவர்கள் பயணித்த போது இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இச்செய்தியினை அல் ஜசீரா நிறுவனம் உறுதிப்படுத்தியதுடன், துயரமான சம்பவம் என இரங்கல் தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடங்கிய நாள் முதல் 165 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அல்- ஜசீராவைச் சேர்ந்த 4 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும், காசா நகரில் நடந்து வரும் இருநாட்டுப் போரின் தற்போதைய நிலை குறித்தும், சில மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேல் சென்று, போர் களத்தில் செய்தி சேகரித்து திரும்பிய நமது செய்தியாளர் கார்த்திகேயன் விளக்குகிறார்...