உலகம்

அமெரிக்க அதிபருக்காக வாங்கப்படும் சீன விமானங்கள்

அமெரிக்க அதிபருக்காக வாங்கப்படும் சீன விமானங்கள்

webteam

சீனாவின் டிரான்ஸ் ஏரோ நிறுவனத்துக்காக தயாரிக்கப்பட்ட போயிங் ரக விமானங்களை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-பின் பயன்பாட்டுக்காக வாங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உலக அளவில் மிகவும் பாதுகாப்பான விமானமாகக் கருதப்படுவது ஏர்ஃபோர்ஸ் ஒன். இவைதான் அமெரிக்க அதிபர்கள் காலம்காலமாக பயணித்து வரும் அதிகாரப்பூர்வ விமானங்கள். ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்கள் ஒவ்வொன்றும் ரூ.400 கோடி செலவில் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையை மாற்றி குறைந்த செலவில் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தை வாங்குமாறு அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற ட்ரம்ப் விமானப்படைக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சீனாவின் டிரான்ஸ் ஏரோ நிறுவனத்துக்காக தயாரிக்கப்பட்ட இரண்டு போயிங் 747-8 ரக விமானங்களை அதிபரின் பயணத்துக்காக வாங்குவது குறித்து அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். டிரான்ஸ் ஏரோ நிறுவனம் இந்த விமானங்களை கடந்த 2012-ல் ஆர்டர் செய்தது. ஆனால், கடும் நஷ்டம் காரணமாக அந்த விமான நிறுவனம் கடந்த 2015-ல் திவாலானது.

இதையடுத்து அந்த விமானங்கள் மோஜாவே பாலைவனத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை 386 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் அதிபரின் பயணம் மேற்கொள்ளும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமாகப் பயன்படுத்தும் நோக்கில் அமெரிக்க விமானப் படை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.