அமெரிக்கா ட்விட்டர்
உலகம்

அமெரிக்கா: செய்யாத தவறுக்காக 48 ஆண்டுகள் சிறை.. விடுதலைக்குப் பிறகு உதவிக்கரம் நீட்ட இணையும் கைகள்!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தாம் செய்யாத கொலைக்காக 48 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார்.

Prakash J

1974ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரத்தின் புறநகர்ப் பகுதியில் இருந்த மதுபானக் கடை ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கரோலின் சூ ரோஜர்ஸ் என்பவர் கொல்லப்பட்டார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட விசாரணையில், க்ளின் சிம்மன்ஸ், டான் ராபர்ட்ஸ் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

arrest

இதில் க்ளிக் சிம்மன்ஸ் என்பவர் குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில், தாம் லூசியானா மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் கூறி வந்தார். ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி, பின்னர் அந்த தண்டனையைச் சிறைத் தண்டனையாக மாற்றியது. க்ளிக் சிம்மன்ஸ் சென்றபோது அவருக்கு வயது 22.

இதையும் படிக்க: பொன்முடி வழக்கு தீர்ப்பு: இதுவரை ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தவர்கள் யார் யார்?-முழு விபரம்

இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை, கடந்த ஜூலை மாதம் மறுவிசாரணைக்கு வந்ததது. அப்போது, சிம்மன்ஸ் குற்றமற்றவர் என கூறி, தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து சிம்மன்ஸ் விடுதலை செய்யப்பட்டார். குற்றமே செய்யாமல் 48 வருட கால சிறைத் தண்டனை அனுபவித்தது குறித்து, ”பொறுமைக்கும் மனஉறுதிக்கும் இது ஒரு பாடம். நடக்காது என யார் கூறினாலும் நம்பாதீர்கள்; ஏனென்றால் நடக்க வேண்டியது நடக்கும்” எனத் தெரிவித்தார்.

சிம்மன்ஸ், இந்த சம்பவத்திற்காக 48 ஆண்டுகள், 1 மாதம் 18 நாட்களைச் சிறையில் கழித்துள்ளார். இதற்கிடையே அவர், கல்லீரல் புற்றுநோயுடன் போராடி வருகிறார்.

இதையடுத்து அவருடைய உடல் மற்றும் குடும்பச் செலவுகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. மேலும் தவறான தண்டனை பெற்றவர்களுக்கு $175,000 இழப்பீடு வழங்கப்படுமாம். அதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பொன்முடிக்கு சிறை: "நல்ல தீர்ப்பு" - ஓய்வுபெற்ற நீதிபதி கற்பக விநாயகம் விளக்கம்