அமெரிக்காவில் திருமணமான 14 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய திருமண உடை மாறியிருந்ததைக் கண்டுபிடித்த பெண் அதை மீட்டுத் தருமாறு சமூக ஊடங்களில் பதிவிட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் மின்னசோடா மாகாணத்தைச் சேர்ந்தவர் வெண்டீ டைலர். இவர் தனது 12 வயது மகளுடன் அமர்ந்து சீரியல் பார்த்துக்கொண்டிருந்த போது அதில், திருமண உடை குறித்து ஒரு நடிகை பகிர்ந்திருக்கிறார். அதை பார்த்தவுடன் தனது மகளிடம் தனது திருமண உடையைப் பற்றி புகழ்ந்திருக்கிறார். எனவே மகள் அதை பார்க்கவேண்டும் என்று ஆசையாகக் கேட்டதால், 14 வருடங்களுக்கு முன்பு பெட்டியில் வைத்த உடையை வெளியேஎடுத்திருக்கிறார்.
ஆனால் உடையை பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ஏனென்றால் அந்த பெட்டியில் தன்னுடைய திருமண உடைக்கு பதிலாக வேறொரு உடை இருந்ததால், அந்த பெண் வருத்தமடைந்தார். எனவே தனது திருமண ஒருங்கிணைப்பாளர்களிடம் தனது திருமண உடையை எங்கு மாற்றினார்கள் என்பதை சோதித்துப்பார்த்து கண்டுபிடித்து தருமாறு வேண்டுகோள் வைத்ததுடன், தனது திருமண புகைப்படம் மற்றும் அந்த பெட்டியில் இருந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, தன்னுடைய உடையை கண்டுபிடித்து தருமாறும், தன்னிடம் உள்ள உடையை உரியவரிடம் சேர்க்க உதவுமாறும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
<div class="fb-post" data-href="https://www.facebook.com/wendie.taylor/posts/10159364010840962" data-width="500" data-show-text="true"><blockquote cite="https://www.facebook.com/wendie.taylor/posts/10159364010840962" class="fb-xfbml-parse-ignore">
HELP!!!! Please read, share, and help me recover my wedding dress and return the one I have to is owner!!! My dress was...Posted by <a href="#" role="button">Wendie Marie on <a href="https://www.facebook.com/wendie.taylor/posts/10159364010840962">Wednesday, 27 January 2021
14 வருடங்களுக்குப் பிறகு திருமண உடையை கண்டுபிடித்து தருமாறு வெளியிடப்பட்ட போஸ்டருக்கு பலரும் விசித்திரமான செயல் என்று கமெண்ட் செய்துவருகின்றனர்.