நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ரிஷிகாட்டுக்கு அழகிய நீல நிறக் கண்கள். அதே நிறத்தில் அவரது குழந்தைகளுக்கும் கண்கள். இயற்கை கொடுத்ததை என்ன செய்யமுடியும்? ஆனால் அந்த கண்கள்தான் கணவரை விட்டுப் பிரிவதற்குக் காரணமாக அமைந்துவிட்டன. நீல நிறக் கண்களுக்காக குடும்பத்தையே புறக்கணித்த அந்த நபரைப் செய்தி ஆப்பிரிக்க மக்களிடையே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கு அவரவர் பிறந்த குடும்பத்தின் அடிப்படையில் வித்தியாசமான நிறங்களில் கண்கள் காணப்படுவது இயற்கையானது. அதை ஒரு பிறவிக் குறைபாடாகக் கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியொருவராக பிறந்தவர் ரிஷிகாட். குழந்தைகளுக்கும் மனைவியைப் போன்ற கண்களைக் கண்டதும் கணவர் வித்தியாசமாக நடக்கத் தொடங்கினார்.
இதுபற்றி உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய ரிஷிகாட், குடும்பத்தில் தனக்கு மட்டுமே நீலநிறக் கண்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதை ஒரு குறைபாடாக நினைத்து அவர் மருத்துவமனைக்குத் சென்றதில்லை. குழந்தைகளும் நலமாகவே உள்ளனர். அப்துல்வாய்சூ ஓமோ டாடா என்பவரை திருமணம் செய்துகொண்ட நாள் முதல் கண்களின் நிறத்தால் பிரச்னை ஆரம்பித்துவிட்டது.
மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நீலநிறக் கண்கள் இருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. முதல் குழந்தை பிறந்ததும் கணவரின் மாறுபட்ட பேச்சை உணர்ந்துகொண்டார் ரிஷிகாட். ஒருகட்டத்தில் கனவனால் கைவிடப்பட்ட அந்தப் பெண், குழந்தைகளை மகிழ்ச்சியாக வளர்க்கும் நோக்கத்துடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
நீலநிறக் கண்களால் மட்டுமே கணவரால் கைவிடப்பட்ட ரிஷிகாட் பற்றிய தகவலை லகோஸ் நகரைச் சேர்ந்த ஆலபி ருக்காயத் என்ற கல்லூரி மாணவர் சமூக வலைதளத்தில் பதிவிட அது உலகம் எங்கும் வைரலாகியுள்ளது