கடந்த காலாண்டில் ப்ளூம்பெர்க்கின் உலகளாவிய நாணயங்கள் தர வரிசைப் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் நாணயம் முதலிடம் பிடித்தது. ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, நாணயத்தின் மீதான வலுவான கட்டுப்பாடு, சர்வதேச உதவிப் பணம் மற்றும் வெளியிலிருந்து வந்த நிதி உதவிகள் காரணமாக ஆப்கானிஸ்தான் ஆப்கானி, இந்த காலாண்டில் 9 சதவீதம் வலுவடைந்துள்ளது. அதாவது ஒரு ஆப்கானி நாணயத்தின் மதிப்பு 1.06 ரூபாய், அப்படியானால் இந்தியா கூடுதல் பணத்தை கொடுத்து ஆப்கானி நாணயத்தை வாங்கும் நிலையில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பில்லியன் கணக்கான டாலர்கள், உதவி பெற்றதன் மூலம் கிடைத்துள்ளது, மேலும் அண்டை நாடுகளுடன் அதிகரித்து வரும் வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் இந்த காலாண்டில் ஆப்கானிஸ்தானின் நாணயத்தின் மதிப்பு உயர்ந்தது மட்டும் அல்லாமல் உலகளாவிய நாணய வளர்ச்சி தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது.
ஆப்கான் நாட்டு நாணயத்தின் கட்டுப்பாடான பணப்புழக்கம், மனிதாபிமான உதவி மற்றும் அண்டை நாடுகள் உடனான வர்த்தகம் ஆகியவற்றின் வாயிலாக ஆப்கானிஸ்தான் நாணயத்தின் மதிப்பு இந்த காலாண்டில் மட்டும் சுமார் 9 சதவீதமும், நடப்பு ஆண்டில் 14 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.18 ரூபாய் அளவில் சரிந்திருக்கும் வேளையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ஆப்கான் நாட்டின் ஆப்கானி நாணயத்தின் மதிப்பு 78.13 ரூபாயாக உள்ளது. அதாவது இன்றைய நிலவரப்படி ஆப்கானிஸ்தானின் ஆப்கானி இந்திய ரூபாயைவிட அதிக மதிப்பில் உள்ளது. அதாவது ஒரு ஆப்கானி நாணயத்தின் மதிப்பு 1.06 ரூபாய், அப்படியானால் இந்தியா கூடுதல் பணத்தை கொடுத்து ஆப்கானி நாணயத்தை வாங்கும் நிலையில் உள்ளது.
மேலும் இன்றைய மதிப்பீட்டின்படி, ஆப்கானி ஒன்றின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 3.72 ஆகும். கடந்த மூன்று மாதங்களில் இந்த நாணயத்தின் மதிப்பு 9% அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒரு டாலருக்கு சுமார் 79 ஆப்கானிகளைக் கொடுக்கவேண்டியுள்ளது. அதே சமயம் இந்தியாவில் ஒரு டாலரின் விலை 80 ரூபாய்க்கு மேல் நிலவுகிறது.
தாலிபன் அமைப்பு 2 வருடத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதில் இருந்து அதன் ஆப்கானி நாணயத்தை மேம்படுத்துவதிலும், டாலர் மற்றும் பாகிஸ்தான் ரூபாயை பயன்படுத்துவதிலும் அதிகப்படியான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்துள்ளது. மேலும், ஆன்லைன் டிரேடிங் தடை செய்யப்பட்டு இருக்கும் வேளையில் இதை மீறுபவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் என்ற உத்தரவும் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.