உலகம்

முதல்கட்டமாக 80 தலிபான் கைதிகள் விடுதலை: அமைதிப் பேச்சுக்காக ஆப்கான் அரசு நடவடிக்கை

முதல்கட்டமாக 80 தலிபான் கைதிகள் விடுதலை: அமைதிப் பேச்சுக்காக ஆப்கான் அரசு நடவடிக்கை

webteam

சில தினங்களுக்கு முன்பு ஆப்ாகன் நாடாளுமன்றத்தில், தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நல்லெண்ண நடவடிக்கையாக முக்கியமான 400 தலிபான் கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி, அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.

பின்னர் படிப்படியாக கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் தொடங்கின. சனிக்கிழமையன்று முதல்கட்டமாக 80 தலிபான் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 320 கைதிகள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

சிறையில் உள்ள தலிபான்கள் ஆப்கைனில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள். கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்கப் படைகளைத் திரும்பப்பெறுவதால், கைதிகளின் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தை தாமதமாகியது.