உலகம்

ரஷ்ய விமான விபத்து: பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிர் துறந்த உதவியாளர்கள்!

ரஷ்ய விமான விபத்து: பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிர் துறந்த உதவியாளர்கள்!

webteam

ரஷ்ய விமான விபத்தில் பயணிகள் சிலரை காப்பாற்றிவிட்டு தங்கள் உயிரை விட்ட விமானப் பணியாளர்கள் பற்றிய தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.

மாஸ்கோவில் இருந்து முர்மான்ஸ்க் பகுதிக்கு 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் சூப்பர் ஜெட் விமானம் நேற்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக மாஸ்கோ விமான நிலையத்தி லேயே தரையிறக்கப்பட்டது. அப்போது ஓடுதளத்தில் வந்துகொண்டிருந்த போது விமானத்தில் திடீரென தீ பிடித்தது. அடுத்த நொடியே தீ மளமளவென்று பற்றத் தொடங் கியது. இதையடுத்து உடனடியாக நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்தது அவசர கால வழி வழியாக, பயணிகள் அலறியடித்து குதித்தனர். இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 41 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதில் சிலர் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் மின்னல் தாக்கியதால், விமானத்தின் தொடர்பு சாதனங்கள் பழுதானதாகவும் அதனால் ஏற்பட்ட கோளாறை அடுத்து அவசரமாக விமானம் தரையிறங்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தீப் பிடித்த விமானத்தின் பின் பகுதியில் இருந்த விமானப் பணிப்பெண் தத்யானா கசட்கினா (Tatyana Kasatkina), விமான உதவி யாளர் மாக்ஸிம் மொய்சீவ் (Maxim Moiseev ) ஆகியோர் பயணிகளைக் காப்பாற்றிவிட்டு தங்கள் உயிரை இழந்துள்ள செய்தி இப்போது தெரியவந்துள்ளது. அவர்களின் இந்த செயல்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

உதவியாளர் மாக்சிம், விமானத்தின் பின் பகுதியில் இருந்துள்ளார். அங்குதான் முதலில் தீப்பற்றியது. உடனடியாகக் கூச்சலிட்ட பயணிகளுக்கு மத்தியில், விரைவாக பின்பக்க அவசரக்கால வழியை திறந்துள்ளார். அப்போது விமானம் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அதற்குள் அந்தப் பகுதியில் தீ முழுவதுமாகப் பற்றியதால் அவர் முயற்சி பலனளிக்கவில்லை. பயணிகள் முன்பக்கமாக ஓடத் தொடங்கினர். இதில் மாக்ஸிம், தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பணிப்பெண் தத்யானா, பயணிகளின் சட்டைக்காலரை பிடித்து இழுத்து முன்பக்கமாகத் தள்ளியுள்ளார். விரைவாக அவர்கள் வெளியேறு வதற்கு உதவிகள் செய்துள்ளார். ஆனால் கடைசியில் அவரும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த நெகிழ்ச்சித் தகவலை விமானத்தில் இருந்து உயிர் தப்பிய பயணிகள் தெரிவித்துள்ளனர்.