ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வாஸ்நேகர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை ‘அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபர்’ என விமர்சித்துள்ளார். விரைவில் ட்ரம்பின் அதிபர் பதவி காலம் முடிய உள்ள நிலையில் இந்த விமர்சனத்தை அவர் முனைவைத்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“நான் ஆஸ்திரியாவில் பிறந்து அமெரிக்காவிற்கு குடியேறியவன். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து சக அமெரிக்க மக்களிடம் பகிர உள்ளேன். ஆஸ்திரியாவில் பிறந்ததால் 1938இல் நாசி படையினர் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் வீடுகளும், பள்ளிக்கூடங்களும், தொழிற்கூடங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த இரவை கிரிஸ்டல்நாக்ட் அல்லது உடைந்த கண்ணாடி சில்லுகளின் இரவு என சொல்வார்கள்.
கடந்த புதன்கிழமை அமெரிக்காவிற்கு உடைந்த கண்ணாடி சில்லுகளின் இரவாக அமைந்தது. ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்து அன்று கேபிடோல் ஹில்லில் பலர் கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த கலவரம் அங்குள்ள கண்ணாடிகளை மட்டுமல்லாது நமது யோசனைகளையும் சிதைத்துள்ளன. எந்த கொள்கையில் அடிப்படையில் அமேரிக்கா உருவானதோ அதுவே அங்கு சிதைக்கப்பட்டுள்ளது. நியாயமாக நடைபெற்ற தேர்தல் மற்றும் அதன் முடிவின் மீதும் ட்ரம்புக்கு உடன்பாடு இல்லாததால் மக்களிடம் பொய் உரைத்து தவறான வழியில் வழிநடத்துகிறார்.
அதிபர் ட்ரம்ப் தனது கடமைகளை செய்ய தவறிய தலைவர். அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபர் அவர். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர் விரைவில் செல்லா காசாக மாற உள்ளார். இருப்பினும் பொய் உரைக்கும் தலைவர்களை நாம் என்ன செய்ய போகிறோம். தேசபக்தி என்பது நாட்டின் பக்கமாக நிற்பது தான். அதிபர் பக்கமாக அல்ல. மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் இதயம் படைத்த தலைவர்கள்தான் நம்மை வழிநடத்த வேண்டும். அமெரிக்கா தற்போது எதிர் கொண்டு வரும் துயர் துடைக்கப்படும். இந்த இருட்டான நாட்களிலிருந்து நாம் வெளிச்சத்திற்கு வரும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
My message to my fellow Americans and friends around the world following this week's attack on the Capitol. pic.twitter.com/blOy35LWJ5
— Arnold (@Schwarzenegger) January 10, 2021