தீவு நாடான டோங்கோ நாட்டின் கடலுக்கு அடியில் நீரில் எரிமலை கடந்த சனிக்கிழமை அன்று வெடித்தது. அதையடுத்து அந்த நாட்டின் கரை பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. அப்போது ஆழிப்பேரலையில் இருந்து நாய்களை காப்பாற்ற முயன்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.
“என் சகோதரி ஏஞ்சலா குளோவர் மற்றும் அவரது கணவரும் கடந்த 2015 முதல் டோங்கோவில் வசித்தனர். விலங்குகளின் மீது அதீத நேசம் கொண்ட அவர்கள் டோங்கோ விலங்குகள் நல சங்கமும் அங்கு அமைத்தனர். அவளுக்கு தெற்கு பசிபிக் பெருங்கடலை ஒட்டி வாழ வேண்டுமென்ற ஆசை. அதனால் டோங்கோவில் வாசித்தார். எரிமலை வெடித்து சிதறியதை கூட படம் பிடித்துள்ளார்.
ஆனால், அதையடுத்து சுனாமி அலைகள் எழுந்துள்ளது. அப்போது நாய்களை காக்க முயன்ற போது அலைகளில் அடித்து செல்லப்பட்டுள்ளார். பின்னர், அவள் உயிரிழந்ததை அவளது கணவர் சொல்லி அறிந்துக் கொண்டோம். இது விபத்து என்பது எங்களுக்கு புரிகிறது. அவள் தனது வாழ்நாளின் இறுதியில் அவளுக்கு பிடித்த இடத்தில் இருந்தாள்” என சொல்கிறார் அவரது சகோதரர் நிக் எலினி.
ஏஞ்சலா குளோவரின் மரண செய்தியை அறிந்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.