உலகம்

இறந்ததாக அறிவிக்கப்பட்ட 20 வயது பெண் இறுதிச் சடங்கின் போது உயிருடன் கண் திறந்த ஆச்சர்யம்

இறந்ததாக அறிவிக்கப்பட்ட 20 வயது பெண் இறுதிச் சடங்கின் போது உயிருடன் கண் திறந்த ஆச்சர்யம்

EllusamyKarthik

அமெரிக்காவின் சவுத்ஃபீல்டில் வசித்து வருபவர் இருபது வயது மாற்றுத் திறனாளி பெண்ணான டைம்ஷா பீச்சம்ப். 

கடந்த ஞாயிறு அன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவர் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால் மருத்துவ உதவியை நாடியுள்ளனர் அவரது பெற்றோர்கள். உடனடியாக அவரை பரிசோதித்த பாரா மெடிஷியன்கள் மூச்சு பேச்சில்லாமல் இருந்த டைம்ஷாவுக்கு சி.பி.ஆர் மற்றும் உயிர்காக்கும் மருத்துவத் சிகிச்சையை அளித்துள்ளனர். 

ஆனால் அவர்களது அரை மணி நேர தொடர் முயற்சிகளுக்கு டைம்ஷாவின் உடல்நிலை ஒத்துழைக்காததால் அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டைம்ஷா இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஓப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து டெட்ராய்டில் உள்ள கல்லறையில் டைம்ஷாவின் உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக டைம்ஷாவின் உடலை எம்பால்மிங் செய்யப்பட இருந்தபோது சவக்கிடங்கு ஊழியர் ஒருவர் அவரது கண்கள் திறந்திருப்பதைக் கவனித்தனர்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டைம்ஷா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இறந்துவிட்டதாக நினைத்து இறுதி சடங்கு செய்யும் வரை சென்ற ஒருவர் தற்போது உயிருடன் இருப்பதாக தெரியவந்தது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.