பிறந்து 3 நாட்களுக்குப் பிறகு, தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில், பச்சிளம் குழந்தை ஒன்று இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. குழந்தையை பெற்றெடுத்த தாய் நிலநடுக்கத்தில் உயிரிழந்துவிட்ட நிலையில், தாய் முகத்தை மட்டுமல்ல அந்த குடும்பத்தின் ஒருவரையும் கூட அந்த குழந்தை இனி அறிய வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது. காரணம் அந்த குடும்பத்தில் உயிரோடு மிஞ்சியது அந்த குழந்தை மட்டுமே.