சீனா ஆய்வு மையத்தில் பணிபுரிந்த தமது சகாக்களில் நான்கு வகையான கொரோனா வைரஸ்கள் கொடுக்கப்பட்டு, அவற்றில் விரைவாக பரவக்கூடியதைக் கண்டுபிடிக்கக் கூறியதாக சாவோ ஷாவோ (Chao Shao) என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஜெனிபர் ஜெங் என்ற சர்வதேச பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினருக்கு அளித்த பேட்டியில் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கொரோனா வைரஸ் சீனாவால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், வூகான் வைரஸ் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஒருவர், இதுபோன்ற தகவலைக் கூறுவது இதுவே முதல்முறையாகும்.