ஆஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மசோதா, முறைப்படி சட்டமாக்கப்பட்டது.
ஒரு பாலுறவுக்கரர்களின் திருமணத்திற்கு ஆதரவாக பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் ஆதரவளிப்பதாக தேசிய மக்கள் கருத்தறியும் அமைப்பு நடத்திய வாக்கெடுப்பில் தெரிய வந்தது. அதன் பின்பு ஒரு பாலின திருமண சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இவர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கான சட்டத்தில் அந்நாட்டின் ஆளுநர் ஜெனரல் பீட்டர் காஸ்குரோவ் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து இந்தச் சட்டம் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. தடைகள் அனைத்தும் நீங்கியதை அடுத்து, ஒரு பாலின திருமணங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் உற்சாக ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.