உலகம்

பிரிட்டன்: டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் 72 வருடம் கார் ஓட்டிய 84 வயது முதியவர்!

பிரிட்டன்: டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் 72 வருடம் கார் ஓட்டிய 84 வயது முதியவர்!

EllusamyKarthik

பிரிட்டன் நாட்டில் 84 வயது முதியவர் ஒருவர் ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) இல்லாமல் போலீசில் சிக்கியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் புல்வெல் (BulWell) பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது அவர் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது வாழ்நாளில் அவர் ஒருபோதும் ஓட்டுநர் உரிமம் எடுத்ததில்லை என்பது தெரியவந்துள்ளது. 

1938-இல் பிறந்த அவர் 12 வயதில் வாகனம் ஓட்ட தொடங்கியுள்ளார். இப்போதுவரை வாகனத்திற்கான இன்சூரன்ஸூம் எடுத்ததில்லையாம். சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எதார்த்தமாக காவல்துறையினர் வாகன பரிசோதனை செய்தபோது அவர் பிடிபட்டார்.

ஓட்டுநர் உரிமம் அவரிடம் இல்லையென்றாலும் தனது வாழ்நாளில் அவர் விபத்து ஏற்படுத்தியதில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். அதனால் யாருக்கும் அவர் உடல் அளவிலும், நிதி அளவிலும் சேதாரத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் மற்றும் தண்டனை குறித்த விவரம் ஏதும் வெளியிடவில்லை.