ஸ்பெயின் நாட்டில் 22 பேருக்கு கொரோனா நோய் தொற்றை பரப்பிய குற்றத்திற்காக 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை கைது செய்துள்ளது அந்த நாட்டு போலீஸ். கொரோனா அறிகுறிகளுடன் அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டுள்ளார் அவர். இருமல், காய்ச்சல் மாதிரியான அறிகுறிகளுடன் தென்பட்ட அவர் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது, அலுவலகத்திற்கு செல்வது என இருந்துள்ளார்.
அவர் மீது சக ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 104 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருப்பதும், அதனால் அவர் PCR டெஸ்டும் எடுத்துள்ளார். தொடர்ந்து ‘நான் உங்களுக்கு நோயை பரப்ப உள்ளேன்’ என சொல்லியே இதனை அவர் செய்துள்ளார். இதனை போலீசார் விசாரணை மூலம் கண்டறிந்துள்ளனர்.
அவர் மாஸ்கை இறக்கிவிட்ட படி உலாவிக்கொண்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மூன்று குழந்தைகள் உட்பட 22 பேர் அவரால் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.