உலகம்

காற்று மாசுபாட்டால் ஆறு லட்சம் குழந்தைகள் இறப்பு

காற்று மாசுபாட்டால் ஆறு லட்சம் குழந்தைகள் இறப்பு

webteam

காற்று மாசுபாட்டால் 6 லட்சம் குழைந்தைகள் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இன்றைக்கு காற்று மாசுபாடு என்பது மனிதர்களை அச்சுறுத்தும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காற்றை சுத்தமாக வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே வரும் தீபாவளி பண்டிகை அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. 

இந்நிலையில் ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் காற்று மாசுபாடு மற்றும் உடல்நலம் குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் காற்று மாசுபாடு மற்றும் காற்றில் கலந்துள்ள நஞ்சை பற்றி பெரிதும் விவாதிக்கப்பட்டது. காற்றில் கலந்துள்ள நஞ்சை சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு அதிகம் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தப் பாதிப்பினால் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் உலக அளவில் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேர்ந்துள்ளதாகவும் அந்தக் கருத்தரங்கில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதாவது உலக அளவில் 15 வயதிற்கும் உட்பட்ட 93 சதவீத குழந்தைகள் இந்தச் சுவாசக் கோளாறுவினால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. காற்று மாசுபாடு என்பது குழந்தைகள் இறப்புக்கான தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 10ல் ஒரு குழந்தை சுவாச பிரச்னையால் உயிரிழப்பதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.