உலகம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 77 வயது நபர் ஐஸ் ஸ்கேட் செய்து அசத்தல்: வைரல் வீடியோ

EllusamyKarthik

அமெரிக்காவின் வாஷிங்டனில் வசித்து வருகிறார் 77 வயதான ரிச்சர்ட் எப்ஸ்டீன். அண்மையில் இவர் ஐஸ் ஸ்கேட் சாகசம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோ பல நெட்டிசன்களின் நெஞ்சங்களையும் வென்றுள்ளது. ரிச்சர்ட் எப்ஸ்டீன், ஸ்கேட் செய்யும் வீடியோவை அவரது மகள் ரெபெக்கா பாஸ்டியன், ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 

“இவர் எனது அப்பா. 77 வயதான அவர் புரோஸ்டேட் புற்றுநோயால் (நிலை 4) பாதிக்கப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ் ஸ்கேட் பயிற்சியில் இறங்கினார். தற்போது அவரது பயிற்சியாளருடன் ஸ்கேட் செய்து வருகிறார்” என சொல்லி அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். 

2 நிமிடம் 16 நொடிகள் உள்ள இந்த வீடியோவை ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட நான்கு நாட்களுக்குள் 2.6 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்கலையும், 15,000 ரீட்வீட்களையும் மற்றும் 1.4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. 

அவரது வீடியோ வைரலானது குறித்து அவரிடம் சொன்னதற்கு “மகிழ்ச்சி. நான் எப்போதுமே சிறந்த தடகள வீரனாக இருக்க வேண்டுமென விரும்புகிறவன்” என சொல்லியுள்ளார் அவர்.