உலகம்

லெபனானில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து : 73 பேர் பலி; 3,700 பேர் காயம்

லெபனானில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து : 73 பேர் பலி; 3,700 பேர் காயம்

webteam

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெய்ரூட்டின் துறைமுகத்தில் நேற்று சக்தி வாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த நகரமும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. கட்டடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்துள்ளன. நகரம் முழுவதும் பல்வேறு கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்து விழுந்தன. பெய்ரூட் முழுவதும் மிகப்பெரிய நில அதிர்வை உணர்ந்து உள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்து மிகமிக சக்தி வாய்ந்ததாக ரிவிக்கப்படுகிறது. இதில் சாலையில் நடந்து சென்ற மக்கள், தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சக்தி வாய்ந்த வெடிவிபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3,700 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லெபனானின் பிரதமர் ஹசன் டயப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உரங்கள் மற்றும் குண்டுகளில் பயன்படுத்தப்படும் மிகவும் வெடிக்கும் பொருளான 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளாக ஒரு துறைமுகக் கிடங்கில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் சேமித்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.