பழுப்பு நிற பசு, சாக்லேட் பால் கொடுக்கும் என்று ஏழு சதவிகித அமெரிக்க இளைஞர்கள் நினைப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவிலுள்ள பால் நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 18 மற்றும் அதற்கு மேல் உள்ள வயதினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சாக்லேட் பால் எதில் இருந்து கிடைக்கிறது என்பதும் ஒரு கேள்வி. இதில் ஏழு சதவிகிதம் பேர், வெள்ளை நிற பசு வெள்ளை பால் கொடுக்கும் போது, பழுப்பு நிற பசுதான் சாக்லேட் பால் கொடுக்கிறது என்று கூறியுள்ளனர். ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பாதி பேர், இந்த சாக்லேட் பால் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.