சாம்சங் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட இருக்கும் லீ ஜீ யோங்கிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தென்கொரிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
சாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவாக, அரசு நடைமுறைகளை மாற்ற, லஞ்சம் கொடுத்ததாக லீ மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதே ஊழல் வழக்கு காரணமாக, தென் கொரிய அதிபர் பார்க் கியான் ஹே பதவியில் இருந்து அகற்றப்பட்டார். சாம்சங் நிறுவனத்தின் தலைவரும், லீயின் தந்தையுமான குன் ஹீ, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.