Pakistan Bomb Blast twitter
உலகம்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு.. 21 பேர் காயம்!

Prakash J

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்று வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகரத்தில் போண்டா பஜாரில் டேங்க் அடா பகுதியில் காவல் துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குண்டுவெடிப்புக்கு பின், அருகில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட தகவலின்படி, வெடிகுண்டு இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி மசூதி ஒன்றின் அருகே மத வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்ற இடத்தில், தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 57 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்தில் மசூதிக்கு அருகில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் குறைந்தது 5 பேர் உயிரிழந்திருந்தனர். அடுத்து, செப்டம்பர் மாத தொடக்கத்தில், பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த வெடிவிபத்தில் ஒரு முக்கிய முஸ்லிம் தலைவர் உட்பட குறைந்தது 11 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், தற்போது ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு.. தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி