உலகம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள் 70 நாட்களுக்கு பின் மீட்பு

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள் 70 நாட்களுக்கு பின் மீட்பு

webteam

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள், 70 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி, ’எம்டி அபகஸ்’ என்ற கப்பல் நைஜீரியாவின் போனி தீவு அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இதில் இருந்த, அசாமைச் சேர்ந்த அங்கித் ஹூடா, மகாராஷ்ட்ரா மாநிலம் கல்யாணை சேர்ந்த சிரங் ஜாதவ், ஒடிஷாவைச் சேர்ந்த சுதீப் குமார், மூகு ரவி, அவினாஷ் ஆகிய 5 இந்திய மாலுமிகளை, கப்பலில் இருந்து கரைக்கு அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் சிறை வைத்தது. 

இதையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில், இந்திய கப்பல் துறை அமைச்சகம் இறங்கியது. நைஜீரியாவில் உள்ள இந்திய தூதர் அபுஜா அந்நாட்டின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதையடுத்து 70 நாட்களுக்குப் பிறகு, 5 இந்திய மாலுமிகளும் கடந்த 27 ஆம் தேதி மீட்கப்பட்டனர். அவர்களை இந்தியா அழைத்து வரும் முயற்சி நடந்து வருகிறது.